உங்க குழந்தையை நடிக்க வைக்குறோம்! கை நிறைய பணம்! நம்பிய இளம் தாய்க்கு கிடைத்த பகீர் அனுபவம்!

படப்பிடிப்பிற்கு குழந்தை தேவையன்று கூறி மர்ம நபர்கள் 7 மாத குழந்தை கடத்தி சென்ற சம்பவமானது.


சென்னை மெரினா கடற்கரையில் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ரஞ்சிதா போன்ஸ்லே பலூன் விற்று வந்தார். இவருக்கு 7 மாத குழந்தை ஒன்று உள்ளது. நேற்று மெரினா கடற்கரையில் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் இவரிடம் பேச்சு கொடுத்துள்ளார். அப்போது படப்பிடிப்பிற்கு குழந்தை வேண்டும் என்று அந்த பெண் ரஞ்சிதாவிடம் முறையிட்டுள்ளார். 

பணம் கிடைக்கும் என்ற பேராசையில் ரஞ்சிதா தன்னுடைய மகனை அவர்களிடம் விற்றுள்ளார். குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக கூறி ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கும், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கும் அந்த பெண் அழைத்து சென்றார்.

ஆனால் அதன் பின்னர் குழந்தையும் சம்பந்தப்பட்ட பெண்ணையும் அவ்விடங்களில் காணவில்லை. உடனடியாக பதறிப்போன ரஞ்சிதா மற்றும் அவரது தாயார் நிகழ்ந்தவற்றை கூறி காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, மஞ்சள் நிறத்தில் சேலை அணிந்த பெண் குழந்தையை தூக்கி செல்வது போன்று காட்சிகள் பதிவாகியிருந்தன.

பதிவான காட்சிகளை அடிப்படையாக கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது சமூகவலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.