19 வயதில் திருமணம்! 20 வயதில் பிரசவம்..! ஹாஸ்பிடலில் மாயாவுக்கு நள்ளிரவு அரங்கேறிய பயங்கரம்! ஊட்டி பகீர்!

பெண் குழந்தையை பெற்றெடுத்த தாய் மறுநாளே உயிரிழந்த சம்பவமானது ஊட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி அமைந்துள்ளது. இதற்குட்பட்ட காந்தல் என்ற இடத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ். மோகன்ராஜின் வயது 25. இவர் அப்பகுதியில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் மாயா. மாயாவின் வயது 20. இவ்விருவருக்கும் ஓராண்டுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் மாயார் கருவுற்றார். நேற்று முன்தினம் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. வலி ஏற்பட்டதை தொடர்ந்து குடும்பத்தினர் மாயாவை உடனடியாக அருகில் இருந்த பார்வதி மெடிக்கல் சென்டர் என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் மாயாவுக்கு பிரசவம் பார்த்து அழகான பெண் குழந்தையை வெளியே எடுத்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென்று மாயா உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் குடும்பத்தினரிடம் கூறியுள்ளனர். உடனடியாக பதறிப்போன குடும்பத்தினர் தாயாரின் உடலை பார்த்து கதறி அழத்தொடங்கினர். இந்த சம்பவமானது மருத்துவமனையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று காலையில் மோகன்ராஜ் ஊட்டி காவல் நிலையத்தில் நிகழ்ந்தவற்றை கூறி தன்னுடைய மனைவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். அதுமட்டுமின்றி அவருடைய உறவினர்கள் மருத்துவமனை என்னும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மாயாவின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது உறவினர்கள் பல திடுக்கிடும் உண்மைகளை கூறியுள்ளனர். அதாவது நேற்று முன்தினம் இரவு 7 மணி வரையிலும் மாயா மற்றும் குழந்தையை எங்களிடம் மருத்துவமனை நிர்வாகம் காண்பிக்கவில்லை என்று கூறியுள்ளனர். பொது மருத்துவமனை மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும் உறவினர்கள் கூறியுள்ளனர்.

காவல்துறையினர் அவர்களை சமாதானப்படுத்திய பிறகு உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். நேரம் சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவமானது கடந்த 2 நாட்களாக இந்த மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.