மாரி 2! கனா ! அடங்கமறு! சீதக்காதி! எல்லாத்தையும் போட்டுத் தள்ளி ஹவுஸ்புல்லாக ஓடும் 2.0!

கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு வெளியான அனைத்து படங்களையும் ஓரங்கட்டி சூப்பர் ஸ்டாரின் 2.0 தொடர்ந்து முக்கியமான திரையரங்குகளில் ஹவுஸ் புல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது.


   ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் லைக்கா தாயரித்த 2.ஓ படத்தை கிறிஸ்துமஸ் மற்றும் அரையாண்டுத் தேர்வு விடுமுறையை ஒட்டி ரிலீஸ் செய்யத்தான் திட்டமிடப்பட்டது. ஆனால் லை க்கா நிறுவனப் படங்கள் தொடர்ந்து விடுமுறை நாட்களில் வெளியாவதாக சிலர் பிரச்சனை எழுப்பினர். இதன் காரணமாகவே நவம்பர் இறுதியில் 2.ஓ படம் வெளியானது.

   சுமார் 450 கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவிட்டு உருவாக்கப்பட்ட 2.ஓ படம் கிறிஸ்துமஸ் மற்றும் அரையாண்டு விடுமுறையை ஒட்டி வெளியாகியிருந்தால் வசூல் எக்குத் தப்பாகியிருக்கும். ஆனால் தயாரிப்பாளர் சங்க பிரச்சனையால் படம் நவம்பர் இறுதியில் ரீலிஸ் ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இருந்தாலும் கூட சூப்பர் ஸ்டார் படத்திற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

  அதிலும் குழந்தைகள் 2.ஓ படத்தை பார்த்து குதூகலிக்கின்றனர். இதனால் படம் வெளியாகி ஒரு மாதம் ஆக உள்ள நிலையிலும் ரசிகர்கள் குடும்பத்தோடு திரையரஙகிற்கு சென்று 2.ஓ படத்தை பார்த்து வருகின்றனர். இதனிடையே கிறிஸ்துமஸ் மற்றும் அரையாண்டு விடுமுறையை கணக்கிட்டு ஏராளமான படங்கள் வெளியாகின. ஆனால் இவற்றில் எந்த ஒரு படமும் கடந்த மாதம் வெளியான 2.ஓவுக்கு டஃப் கொடுக்க முடியவில்லை.

   சென்னையை பொறுத்தவரை மிகவும் பிரபலமான சத்தியம் திரையரங்கில் தற்போது வரை மெயின் ஸ்கீரினில் 2.ஓ தான் ஓடிக் கொண்டிருக்கிறது. தனுசின் மாரி 2, சிவகார்த்திகேயனின் கனா, விஜய் சேதுபதியின் சீதக்காதி, ஜெயம் ரவியின் அடங்க மறு படங்கள் வெளியான நிலையிலும் 2.ஓ படத்திற்கு தான் ரசிகர்கள் மத்தியில் அதிக கிரேஷ் உள்ளது. இதனால் முக்கிய திரையரங்குகள் பலவும் 2.ஓவுக்கு மெயின் ஸ்கீரினை கொடுத்துள்ளதுடன், பெரும்பாலான காட்சிகளை ஒதுக்கியுள்ளன.

   அத்துடன் 2.ஓ திரைப்படம் சென்னையில் ஓடும் அனைத்து திரையரங்குகளிலும் மாலை மற்றும் இரவுக் காட்சி ஹவுஸ் புல்லாகிவிடுகிறது. அதே சமயம் மற்ற நடிகர்களின் திரைப்படங்கள் ஓடும் திரையரங்குகளில் காற்றாடுகிறதாம். ரஜினியின் ஸ்டார் பவர் பல தலைமுறைகளை தாண்டியும் மங்காமல் இருப்பது திரையுலகினரை மட்டும் அல்லாமல் பிரபல ஹீரோக்களையும் கூட வாய் பிளக்க வைத்துள்ளது.  

   கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு வெளியான அனைத்து படங்களையும் ஓரங்கட்டி சூப்பர் ஸ்டாரின் 2.0 தொடர்ந்து முக்கியமான திரையரங்குகளில் ஹவுஸ் புல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது.