கேரள மாநிலத்தை சேர்ந்த 2 இளைஞர்கள் தன்பாலின திருமணம் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிவேத்..! அப்துல்..! ஆணுக்கும் ஆணுக்கும் கல்யாணம்..! வைரலாகும் வெட்டிங் போட்டோ சூட்..!
![](https://www.timestamilnews.com/uploads/news_image/news_16936_1_medium_thumb.jpg)
இந்தியா போன்ற கலாச்சாரமிக்க நாட்டில் தன்பாலின திருமணம் என்பது அறவே வெறுக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக தன்பாலின உறவை அனுமதிக்க பல்வேறு பிரிவினர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தன் பாலினத்தவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற உத்தரவை சென்ற ஆண்டு உச்சநீதிமன்றம் விதித்தது.
அதன்பின்னர், 2018-ஆம் ஆண்டில் நிகிலேஷ் மற்றும் சோனா தம்பதியினரை அதிகாரபூர்வமாக தன்பாலின திருமணம் செய்துக்கொண்டனர். இருவரும் ஐடி துறையில் பணியாற்றி வந்தவர்களாவர். இவர்களுக்கடுத்து 2-வது திருமணமாக கேரளா மாநிலத்தை சேர்ந்த நிவேத் மற்றும் அப்துல் ரஹீம் ஆகியோர் சென்ற ஞாயிற்றுக்கிழமையன்று திருமணம் செய்து கொண்டனர்.
பெங்களூருவிலுள்ள சின்னப்பன் நெல்லி குளக்கரையில் இவர்களுடைய திருமணம் அரங்கேறியுள்ளது. திருமணத்திற்குப் பிறகு இதே இடத்தில் போட்டோஷூட்டும் நடைபெற்றுள்ளது. இது பற்றி அவர்களிடம் கேட்டறிந்த போது, "எங்கள் இருவரின் உள்ளங்களும் ஒத்துப்போனதால் திருமணம் செய்து கொள்ளும் முடிவை எடுத்தோம். திருமணமான பிறகு வெளிநாட்டிற்கு சென்று விடலாம் என்று முடிவு செய்திருந்த நிலையில், 377 பிரிவின் சட்டம் இந்தியாவிலேயே அமல்படுத்தப்பட்டுள்ளதால், இங்கேயே தங்க முடிவு எடுத்துள்ளோம்" என்று கூறியுள்ளனர்.
இந்த திருமணமானது புரட்சிகரமானதாக கருதப்படுகிறது.