வீடு வீடாக சென்று வாசலில் பணம் வைத்துச் செல்லும் 2 பேர்..! சென்னையில் கொரோனாவை பரப்ப விபரீத முயற்சி! அதிர்ச்சி வீடியோ உள்ளே!

சென்னையில் வீடு வீடாக 2 இளைஞர்கள் சென்று கட்டுக்கட்டாக பணத்தை வீசி வந்த சம்பவமானது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 2,48,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 35,63,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

தமிழகத்தில் இன்றுவரை 3,023 பேர் இந்த வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 1,400 பேர் இதுவரை குணமடைந்துள்ளதாகவும், 30 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. .

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நோய் பாதிக்கப்பட்டோரின் கணிசமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் எண்ணிக்கையானது நாளுக்குநாள் பெரிய அளவில் உயர்ந்து வருகிறது. இந்த எண்ணிக்கை உயர்வானது சென்னையில் சமூக பரவல் உண்டாகிவிட்டதா என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. நேற்று வரை 1,450-க்கும் மேற்பட்டோர் சென்னையில் பாதிக்கப்பட்டுள்ளனர்

இந்நிலையில் கடந்த சில நாட்களாக வீடு வீடாக சென்று 2 இளைஞர்கள் கட்டு கட்டாக பணம் வைத்தவரும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதனால் மக்கள் பெரிதளவில் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் வந்து சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொரோனா வைரஸ் நோயை பரப்புவதற்காக இந்த சம்பவமானது அரங்கேறியதா என்பது குறித்து காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.