பைக்கில் அதிவேகத்தில் பறந்த இளைஞர்கள் நேருக்கு நேராக மோதி பலி - திருத்தணி கோர விபத்து

2 இருசக்கர வாகனங்கள் மோதி கொண்டதில் 2 பேர் உயிரிழந்த சம்பவமானது திருத்தணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருத்தணிக்கு அருகே வேளஞ்சேரி என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம். இவருடைய மகனின் பெயர் வெங்கடேஷ். வெங்கடேஷின் வயது 24. இவர் அந்த கிராமத்தின் சுற்றுவட்டாரத்தில் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

திருத்தணியில் அண்ணாநகர் எனின் பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய வயது 32. சென்னையில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். விடுமுறைக்காக தன் சொந்த ஊரான திருத்தணிக்கு சென்றுள்ளார்.

இருவரும் தங்கள் பணியை முடித்துவிட்டு நேற்று மோட்டார் சைக்கிளில் வீடு  திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராவிதமாக சென்னை-திருத்தணி பைபாஸ் சாலையில் இருவரும் எதிரெதிரே மோதி கொண்டனர். மோதிய வேகத்தில் இருவரும் பறந்து சென்றனர். உயிருக்கு போராடி கொண்டிருந்த நிலையில் இருவரையும் அங்கிருந்த பொதுமக்கள் திருத்தணி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். துரதிஷ்டவசமாக சுரேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேல் சிகிச்சைக்காக வெங்கடேசனை சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றினர். ஆனால் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இந்த கோர விபத்தானது திருத்தணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.