2 வருடமாக இடைவிடாத இருமல்! காரணம் தொண்டையில் உயிரோடு வசித்து வந்த அட்டை பூச்சி! ஸ்கேன் ரிப்போர்ட் பார்த்து அதிர்ந்த டாக்டர்கள்!

சீனாவில் தொண்டை வலி என வந்தவருக்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் தொண்டையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.


சீனாவில் பெயர் வெளியிடப்படாத ஒருவர் நீண்ட நாட்களாக தொண்டை வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தொண்டை வலி பொறுத்துக் கொள்ள முடியாத அளவிற்கு அதிகமானதால் மருத்துவ பரிசோதனைக்கு வந்துள்ளார். 

இவருக்கு ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள் எந்த காயமும் இல்லை; ஆனால் வலி இருப்பதை கண்டு ஆச்சரியப்பட்டனர். பின்னர் எண்டோஸ்கோபி கேமரா மூலம் உள்ளே விட்டு பார்க்கையில் மருத்துவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.  

பரிசோதனைக்கு வந்தவரின் தொண்டையில் இரண்டு நீளமான அட்டைப் பூச்சிகள் இருப்பது தெரியவந்தது. பின்னர் அவருக்கு மயக்க மருந்து கொடுத்து தொண்டை அறுவை சிகிச்சை செய்து அட்டைப் பூச்சிகள் நீக்கப்பட்டது. 

அவர் குடிக்கும் தண்ணீரில் கண்ணுக்குத் தெரியாத அளவில் அட்டை பூச்சிகள் இருந்திருக்கலாம். நாளடைவில் இத்தகைய நீளத்திற்கு வளர்ந்திருக்கலாம் என தெரிவித்தனர்.