வீட்டிற்கு அருகே பெற்றோர் தோண்டிய பள்ளம்! அவர்கள் குழந்தைக்கே சவக்குழியான விபரீதம்! செய்யூர் பயங்கரம்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செய்யூர் அருகே உள்ள கிராமத்தில் குடிநீர் இணைப்பில் இருந்து தண்ணீர் பிடிப்பதற்காக தோண்டப்பட்ட குழியில் இரண்டரை வயது குழந்தை தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பனையூர் கிராமத்தில் வசித்து வருபவர்கள் முத்து மற்றும் தமிழரசி தம்பதியினர் ஆவர். இவர்களுக்கு இரண்டரை வயது பெண் குழந்தை ஒன்று உள்ளது. 

இவர்கள் வீட்டின் அருகே தண்ணீர் குடிப்பதற்காக பள்ளம் ஒன்று தோண்டப்பட்டு இருக்கிறது அந்த பள்ளத்தில் மழைநீர் தேங்கி இருந்தமையால் அந்த சிறுமி விளையாடிக் கொண்டிருந்த போது தவறி அந்த பள்ளத்தில் விழுந்து விட்டார்.

வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை நீண்ட நேரமாக காணவில்லை என்று பெற்றோர் தேடிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அருகில் இருந்த பள்ளத்தில் நீரில் மூழ்கியிருந்த சிறுமியைப் பார்த்து பெற்றோர் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உடனே அந்த குழந்தையை மீட்டு அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர் குழந்தை இறந்துவிட்டதாக கூறி இருக்கிறார். 

இதனை கேட்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். மேலும் இந்த சம்பவமானது அந்த இடத்தில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.