திடீரென வெடித்துச் சிதறிய மின்சார பல்பு..! 2 வயதில் பறிபோன சிறுமியின் விரல்கள்..! ஆனால் தற்போது நிகழ்ந்த அதிசயம்! என்ன தெரியுமா?

அலபாமா: மின்சார பல்பு வெடித்ததில் விரல்களை இழந்த சிறுமிக்கு வெற்றிகரமாக செயற்கையான கை பொருத்தப்பட்டுள்ளது.


அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள ஏதென்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஆப்ரி ஹார்பர். 4 வயதான இந்த சிறுமி, 2 வயதாக இருந்தபோது, கடந்த 2018ம் ஆண்டில் அம்மாவுக்கு உதவியாக வீட்டில் இருந்துள்ளார். அப்போது விளையாட்டுத் தனமாக, மின்சார பல்பு ஒன்றை கையில் பிடித்து விளையாடியுள்ளார்.

எதிர்பாராவிதமாக அந்த பல்பு வெடித்துச் சிதறியதில் சிறுமி ஆப்ரி, கை விரல்களை இழந்தார். இதன்பேரில், அவருக்கு தற்போது உள்ளங்கையில் மட்டும் செயற்கையான கை பொருத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே விரல்கள் இன்றி மொட்டையாக உள்ள கையின்மீது, அப்படியே ரோபாட்டிக் முறையில் இயங்கும் செயற்கையான விரல்களுடன் கூடிய கையை மருத்துவர்கள் வெற்றிகரமாக பொருத்தியுள்ளனர். தற்போது அந்த சிறுமி மகிழ்ச்சியாகக் காணப்படுகிறாள்.

தனது பெற்றோருடன் உற்சாகமாக விளையாடும் சிறுமி, ''செயற்கையான கை பொருத்திய இளவரசி போல உணர்கிறேன்,'' என்று பெருமிதம் பொங்க கூறுகிறாள்.