10 அடி ஆழ செப்டிக் டேங்க்! மூடி வைக்கப்படாத விபரீதம்! 2 வயது மெகினனுக்கு ஏற்பட்ட பயங்கரம்! நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

2 வயது குழந்தை விளையாடிக் கொண்டிருந்தபோது 10 அடி ஆழ கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சோக சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அடுத்த சிவானபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் சாமுண்டி. இவருக்கு 2 வயதில் மெகினன் என்ற ஆண் குழந்தை இருந்தது. வீட்டு பின்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மெகினன் பயன்பாட்டில் இல்லாத கழிப்பறையின் 10 அடி ஆழ கழிநீர் தொட்டியில் தவறி விழுந்துள்ளான்.

கழிவுநீர் தொட்டியை சுற்று ஏரி நீரும் கலந்திருந்ததால் குழந்தை குழியில் விழுந்த சம்பவம் யாருக்கும் தெரியவில்லை. இதற்கிடையே குழந்தை காணவில்லை என பெற்றோர் தேடி அலைந்தனர். பின்னர் சந்தேகப்பட்டு அந்த 10 அடி ஆழ கழிவுநீர் தொட்டியை பார்த்தபோது, அதில் குழந்தை மிதந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியகா குழந்தையை மீட்டு காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். ஆனால், குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியதை கேட்டு அனைவரும் குழந்தையை கட்டிபிடித்து கதறி அழுதனர். இது குறித்து தகவல் அறிந்த காவேரிப்பட்டணம் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

குழந்தை சுஜித் குழியில் விழுந்து உயிரிழந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. எங்குமே கேட்பாரற்று குழியோ, ஆள்துறை கிணறோ இருக்கக்கூடாது என அரசாங்கம் உத்தரவு போட்டது. அதை மதித்து தன்னுடைய வீட்டருகே இருக்கும் குழியை மூடியிருந்தார் தந்தை ஒரு குழந்தையை இழந்திருக்க மாட்டார்.