அப்பா வா கடைக்கு போவலாம்! பெற்றோர் இறந்தது தெரியாமல் உருகிய பிஞ்சு!

கும்பகோணம் அருகே குடும்பத்தகராறு காரணமாக அவர்களின் பெற்றோர் இரண்டு வயது மகனை தவிக்கவிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கும்பகோணம் மாவட்டம் குட்டியான தெருவைச் சேர்ந்தவர் சேதுராமன் மகன் பாலமுருகன் இவர் தினக்கூலியாக டிபன் கடை ஒன்றில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி அருணா. இவர்களுக்கு இரண்டு வயதில் நரேஷ்மதன் என்ற ஆண் குழந்தை உள்ளது. இவர்கள் இருவரும்  வெகு நாட்களாகவே  காதலித்து வந்ததாக தெரிகிறது உங்களது காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த பாலமுருகன் அருணா இருவரும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளனர். இருதரப்பு குடும்பத்திலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் இரண்டு பேருடைய உறவினர்களும் இவர்களை பார்க்க வருவது இல்லை. இவர்கள் இருவரும் அந்த ஊரை விட்டு தனியே  வீடு வாடகைக்கு எடுத்து  இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளது. இடத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் கணவன் மனைவி இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அந்த குழந்தை தன் தாய் தந்தை இறந்தது கூட தெரியாமல் அருகில் அமர்ந்து

அவர்களின் உடலைப் பார்த்து, `அம்மா எந்திரிம்மா, அப்பா எந்திரிப்பா ,வா கடைக்குப் போகலாம்' என இரண்டு வயதுக் குழந்தை தன் பெற்றோருக்கு என்ன நடந்தது எனத் தெரியாமல் அழுத்தது. குழந்தையின் அழுகை சத்தம்  கேட்டு அருகில் இருந்தவர்கள்  அவர்கள் வீட்டிற்கு வந்தனர். இந்நிலையில்  இவர்களது வீடு நீண்ட நேரமாகப் பூட்டிக்கிடந்துள்ளது. வீட்டின் உள்ளே நரேஷ்மதன் நீண்ட நேரமாக அழுது கொண்டே இருந்துள்ளான். அருணா அவனின் அழுகையை நிறுத்த எதுவும் செய்யவில்லை.

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் குழந்தை அழுதுகொண்டிருக்கிறான். அழுகையை நிப்பாட்டாமல் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என ஜன்னல் வழியே எட்டிபார்த்துள்ளனர். உள்ளே கட்டில் மேல் அருணாவும் ஜன்னல் ஓரத்தில் பாலமுருகனும் சடலமாகக் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து உடனே காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் அவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதை கேள்விப்பட்ட அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் சம்பவம் நடந்த வீட்டின் முன் திரண்டனர்.