60 வயது பாட்டி போல் காட்சி அளிக்கும் 2 வயது பெண் குழந்தை..! பதற வைக்கும் விநோத நோய்..! உலகில் இந்த குழந்தைக்கு மட்டுமே இந்த நோய்..!

லண்டன்: உடல் செல்கள் வேகமாக அழிவதால், 2 வயதிலேயே பாட்டி போன்ற தோற்றத்தை இந்த சிறுமி பெற்றுள்ளார்.


பிரிட்டனைச் சேர்ந்தவர் இஸ்லா கீல்பேட்ரிக் ஸ்கிரீடான். இவருக்கு 2 வயதாகும் நிலையில், பிறக்கும் முன்பே, இந்த சிறுமிக்கு, பெஞ்சமின் பட்டன் நோய் இருப்பதாக கண்டறியப்பட்டது. அதாவது, இந்த பாதிப்பு இருக்கும் குழந்தைகளுக்கு உடல் செல்கள் மிக வேகமாக அழியும். இதனால், வயதுக்கு மீறிய முதிர்ச்சி தோற்றத்தை அவர்கள் பெறுவார்கள்.

சாதாரணமாக, மனித உடலில் உள்ள செல்கள் அழிந்து, புதிய செல்கள் உண்டாகும். அன்றாடம் நடைபெறும் இந்த மனித உடல் சுழற்சி, அதிவேகமாக நடைபெறும்போது, புதிய செல்கள் உண்டாக போதிய அவகாசம் கிடைக்காது. இதனால், நமது உடல் முதிர்ச்சியடைந்து, முதியவர் போல தோன்ற நேரிடும். அத்துடன் அவர்களின் சுவாசக் குழாய் மிகக் குறுகியதாக இருப்பதோடு, இதயமும் சரிவர இயங்க முடியாத நிலை உண்டாகும். இயல்பாக பேசவும் முடியாது. இதுதான் பெஞ்சமின் பட்டன் நோய்.  

இத்தகைய பாதிப்பில் இருந்து மீள சிறுமி இஸ்லாவின் பெற்றோர் கடும் மருத்துவ பரிசோதனைகளை நாடி வருகின்றனர். ஆனாலும், போதிய பலன் கிடைக்கவில்லை. சிறுமி எவ்வளவு நாள் இப்படி உயிர் வாழ்வாள் எனத் தெரியாத வேதனை பெற்றோருக்கு இருந்தாலும், சிறுமி இஸ்லா மகிழ்ச்சியாகவே காணப்படுகிறாள்.

தனது பெற்றோர் உள்பட அனைவரிடமும் வாய் திறந்து பேச முடியாவிட்டாலும், சிறுமி இஸ்லா, ஜாடை முறையில் பேசுவதோடு, சிறு சிறு விளையாட்டுகளை செய்து, சிரிப்பூட்டவும் செய்கிறாள். இந்த குழந்தை தனது பாட்டி போல உள்ளதாக, அவளது தந்தை கீல்பேட்ரிக் குறிப்பிடுகிறார்.