உடம்புக்குள் ஆங்காங்கே ரத்தம் கசிந்த விபரீதம்! சாவின் விளிம்புக்கு சென்ற 2 வயது குழந்தை! காரணம் பசும் பால்! அதிர வைக்கும் ரிப்போர்ட்!

வான்கூவர்: மாட்டுப் பால் குடித்த குழந்தைக்கு பக்க விளைவாக ரத்த சோகை ஏற்பட்டுள்ளது.


கனடாவில் உள்ள அன்டாரியோ பகுதியை சேர்ந்தவர் திருமதி. ஜென்காரெலி. இவரது மகள் மியா (2 வயது). இச்சிறுமிக்கு  ஜென்காரெலி தினசரி 6 பாட்டில்கள் மாட்டுப் பால் புகட்டி வந்துள்ளார். இதனால் பக்க விளைவு ஏற்பட்டு, சிறுமிக்கு ரத்த சோகை மற்றும் குடலில் ரத்தக் கசிவு உள்ளிட்டவை பாதித்துள்ளன. இதனால், பசியுணர்வு குறைந்து வயிறு மந்தமானதோடு, அடிக்கடி சுவாசம் இன்றி சிறுமி மயக்கமடைந்திருக்கிறாள்.   

இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமிக்கு, மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுபோன்ற சிறு குழந்தைகளுக்கு மாட்டுப் பால் மற்றும் கால்சியம் நிறைந்த வெண்ணெய், நெய், மீன், புரோக்கோலி, ஆல்மாண்ட், ஃபிக்ஸ், டர்னிப் கிரீன்ஸ் போன்றவற்றை தரும்போது அவர்களின் உடலில் உள்ள தாதுச்சத்தை அவை உறிஞ்சிக் கொள்ளும்.

இதனால், போதிய ஊட்டச்சத்து இன்றி குழந்தைகளின் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைந்து ரத்த சோகை உண்டாக நேரிடுகிறது. இதை தவிர்க்க பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் தருவது அவசியம் என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.