3வது கணவனுடன் ரயில்வே பிளாட்பாரத்தில் மதிமயங்கிய பெண்..! 2 வயது பெண் குழந்தைக்கு அப்போது ஏற்பட்ட பகீர் சம்பவம்!

சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 2 வயது குழந்தை கடத்தப்பட்டுள்ளது சம்பவமானது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் மர்ஜினா. இவருடைய வயது 21. இவருக்கு 2 ஆண்டுகள் முன்னர் அசார் அலி என்று இளைஞருடன் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினருக்கு அஜிதா என்ற 6 வயது மகளும், ரஜிதா என்ற 2 வயது மகளும் உள்ளனர்.

இதனிடையே கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் பிரிந்தனர். மர்ஜினா 2-வதாக வேறு ஒரு இளைஞரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக, சில மாதங்களிலேயே அவரையும் பிரிந்தார். 

3-வதாக ஹமீது என்பவரை திருமணம் செய்து கொண்டார். 10 நாட்களுக்கு முன்னர் அவரையும் பிரிந்தார். இதனிடையே நேற்று இரவு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தன்னுடைய குழந்தைகளுடன் மர்ஜினா தூங்கிக்கொண்டிருந்தார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது, ரஜிதாவை காணவில்லை.

அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்தும் கிடைக்காத விரக்தியில் மர்ஜினா காவல்நிலையத்தில் புகாரளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அவ்வாறு செய்த போது குழந்தையை மர்ஜினாவின் 3-வது கணவரான ஹமீத்தின் நண்பர் ரஷீத் தூக்கி செல்வது தெரியவந்துள்ளது.

செல்போன் சிக்னல் மூலம் காவல்துறையினர் ரஷீதை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவமானது சென்ட்ரல் ரயில்நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.