அழுகாத சாமி.. அம்மா மேல தான் இருக்கேன்.. கதறிய தாய்..! சரிம்மா..! 30 அடி கிணற்றுக்குள் இருந்து வந்த பதில்! நெகிழ்ச்சி நிமிடங்கள்!

ஆழ்துளை கிணற்றில் 2 வயது சிறுவன் விழுந்த சம்பவமானது மணப்பாறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை எனுமிடம் அமைந்துள்ளது. இங்கு நடுக்காட்டுப்பட்டி எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பிரிட்டோ என்பவர் வசித்து வருகிறார். இவர் தோட்டத்துடன் அமைந்த வீடு ஒன்றை அப்பகுதியில் விலைக்கு வாங்கியுள்ளார். அந்த தோட்டத்தில் விளையும் சோளத்தை தண்ணீர் பாய்ச்சுவதற்காக ஆழ்துளை கிணறு ஒன்றை அமைத்தார். இந்த கிணறானது 30 அடி ஆழம் பெற்றது. இந்த கிணற்றுக்கு அருகே பிரிட்டோவின் 2 வயது குழந்தையான சுஜின் விளையாடி கொண்டிருந்தது.

விளையாடி கொண்டிருந்த சுஜின் தவறி ஆழ்துளை கிணற்றில் விழுந்தது. குழந்தை கிணற்றில் விழுந்த உடன் பதறிப்போன பிரிட்டோ தன்னுடைய நண்பர்களுடன் விரைந்து மீட்ங முயற்சித்தார். 25 அடியில் குழந்தை சிக்கிக்கொண்டதால் அவர்களால் மீட்க இயலவில்லை. உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

பின்னர் தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். காவல்துறையினர், தீயணைப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் குழந்தையை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 5 மணி நேரமாக தோண்டிக்கொண்டிருந்த பாதையில் பாறை இருந்துள்ளதால் மாற்று வழியில் முயற்சித்து வருகின்றனர்.

குழந்தையின் தாயாரும், மாமாவும் "அழுகாத சாமி..... நானிருக்கேன்" என்று கூறியதும், அதற்கு சுஜின் "உம்" என்று பதிலளித்ததும் அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியது. குழந்தைக்கு மனதைரியம் அளித்தபடி மேலிருந்து அவனிடம் பேச்சு கொடுத்து வருகின்றனர். ஆழ்துளை கிணறு சிக்கி கொண்டவர்களை மீட்பதில் திறமைசாலிகளாக கருதப்படும் நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களிலிருந்து ஆட்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இன்னும் சில மணி நேரத்தில் குழந்தையை பத்திரமாக மீட்டு எடுத்து விடுவோம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த சம்பவமானது மணப்பாறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.