குழந்தைகளை வளர்ப்பதில் பெற்றோர் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும். குறிப்பாக 6 வயது நிரம்பும் வரை குழந்தைகளை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.
செல்போனில் தாய் மும்முரம்! 2வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை! பிறகு நேர்ந்த அதிசயம்!

பெற்றோரின் கவனக்குறைவினால் 2 வயது ஆண் குழந்தை வீட்டின் முதல் மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளது. சென்னையில் உள்ள சூளைமேட்டைச் சேர்ந்தவர் மொய்தீன். இவர் ஒரு கால் டாக்சி டிரைவர். இவருக்கு திருமணமாகி, 2 வயதில் ஒரு ஆண்குழந்தை உள்ளது. அவன் பெயர் நசீர் என்பதாகும். மனைவி மீண்டும் கர்ப்பமடைந்துள்ளார். ஒரு அபார்ட்மெண்டில் வாடகை வீட்டில் 2வது தளத்தில் வசித்து வருகின்றனர்.
மொய்தீனின் மனைவி செல்போனில் பேசிக் கொண்டிருக்க, நசீர் அங்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்தான். பிடிச்சுவர் மிகவும் சிறிய உயரத்திலே கட்டப்பட்டிருந்தது.விளையாடிக் கொண்டிருந்த நசீர் திடீரென்று பால்கனி பிடிச்சுவரில் ஏறி தவறி கீழே விழுந்துள்ளான்.
தலையில் பலத்த காயமடைந்த நசீருக்கு எழும்பூர் குழந்தை நல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது குறித்து சூளைமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்