பயங்கர சத்தம்..! திடீரென பற்றி எரிந்த பச்சை தென்னை மரம்..! கீழே நின்ற கவிதா துடிதுடித்து உயிரிழந்த பயங்கரம்..! அதிர்ச்சி சம்பவம்!

கனமழையின் போது மின்னல் பாய்ந்து கூலித்தொழிலாளியின் மனைவி உயிரிழந்த சம்பவமானது கிருஷ்ணகிரியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னை, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்தது. கிருஷ்ணகிரியில் கணிசமான அளவிற்கு மழை பெய்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள முன்றம்பட்டி என்று இடத்திற்கு அருகேயுள்ள கேத்துநாய்க்கன்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் சுற்றுவட்டார பகுதிகளில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் கவிதா. கவிதாவின் வயது 26. இவர்களுடைய கிராமப்பகுதியில் கன மழை பெய்து சாலை முழுவதும் மழைநீரால் வெள்ளமாகியுள்ளது. 

நேற்று காலையில் இவர்களது கிராமப்பகுதியில் மழை வெளுத்து வாங்கி கொண்டிருந்தது. இவரும் இவருடைய தோழியான சசிகலாவும் தண்ணீர் பிடிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது துரதிஷ்டவசமாக இருவர் மீதும் மின்னல் தாக்கியுள்ளது.

இது சம்பவ இடத்திலேயே கவிதா உயிரிழந்தார். சசிகலாவை அங்கிருந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் மேற்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவமானது அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.