61 வயது தாத்தாவுடன் தகாத உறவு! செல்போன் மூலம் தாயிடம் சிக்கிய 9ம் வகுப்பு மாணவி! கோவையை அதிர வைத்த சம்பவம்!

2 மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக முதியவர் மற்றும் ஒரு வாலிபரை காவல்துறையினர் கைது செய்திருப்பது கோயம்புத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையத்திற்கு அருகே ஐயப்பன் நகர் என்னும் இடம் அமைந்துள்ளது. இங்குள்ள காய்கறி மார்க்கெட்டில் ஷேக் பாவா என்ற 61 வயது முதியவர் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அப்பகுதியில் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தன்னுடைய குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார்.

6 மாதங்களுக்கு முன்னர் வீட்டில் யாருமில்லாத நேரத்தில், ஷேக் பாவா அந்த மாணவியின் வீட்டிற்கு சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன்பிறகு வீட்டில் மாணவி தனியாக இருக்கும் போதொல்லாம் ஷேக் பாஷா அவரை மிரட்டி கற்பழித்து வந்துள்ளார்.

திடீரென்று ஒரு நாள் மாணவியின் தாயார் அவருடைய செல்போனை ஆய்வு செய்ய போது, அவர் தொடர்ந்து ஷேக் பாவாவிடம் பேசி வந்தது தெரியவந்துள்ளது. உடனடியாக தாய் மகளிடம் விசாரணை நடத்தியபோது, தனக்கு நேர்ந்த இன்னல்கள் அனைத்தையும் மகள் கூறியுள்ளார். உடனடியாக மாணவியின் பெற்றோர் அப்பகுதி காவல் நிலையத்திற்கு சென்று ஷேக் பாவா மீது புகார் அளித்துள்ளனர்.

புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் ஷேக் பாவா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்றொரு சம்பவமாக ஆர்.எஸ்.புரம் பகுதியில் முகமது வாசிக் என்ற 29 வயது இளைஞர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருடைய பக்கத்து வீட்டில் 14 வயதான இளம்பெண் வசித்து வந்துள்ளார்.

அக்கம்பக்கத்தினர் என்பதால் வாசிக் அடிக்கடி அந்த இடம்பெண்ணின் வீட்டிற்கு சென்று வருவது வழக்கமாக கொண்டிருந்தார். சம்பவத்தன்று யாரும் இல்லாத நேரத்தில் முகமது வாசிக் அந்த இளம்பெண்ணை பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளார். 

வீட்டிற்கு பெற்றோர் வந்தவுடன் அந்த சிறுமி அழுது கொண்டு தனக்கு நேர்ந்த இன்னல்களை கூறி கதறி அழுதுள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் முகமது வாசிக்கை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த இரு சம்பவங்களும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.