விலை மாதர்களான குடும்ப பெண்கள்..! டிக் டாக் வீடியோ விபரீதம்! அதிர வைக்கும் சம்பவம்!

டிக்டாக்கில் தங்களுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்திய 2 பெண்கள் விலைமாதர்களாக சித்தரிக்கப்பட்ட சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மதுரை மாவட்டத்தில் ஒத்தக்கடை எனும் இடம் அமைந்துள்ளது.  இங்கு மீனாட்சி மற்றும் கயல் ஆகிய தோழிகள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் பாரம்பரிய உடையான சேலையில் டிக்டாக்கில் தோன்றி பல்வேறு வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.

இவர்கள் நகைச்சுவை, நையாண்டி, ஆன்மீகம் முதலிய பல ரகங்களில் வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளார். அப்போது தேனி மாவட்டத்தை சேர்ந்த சுகந்தி என்ற பெண்ணுடன் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. சுகந்தி தன்னுடைய ஆண் நண்பருடன் செய்யும் காதல் சேட்டைகளை வீடியோவாக டிக்டாக்கில் பதிவு செய்வதை வழக்கமாக கொண்டவர். அற்ப லைக்குகளுக்காக அவர் இவ்வாறு வீடியோ பதிவு செய்வதை மீனாட்சி கண்டித்துள்ளார். மேலும் மீனாட்சி அவருடனான நட்பையும் துண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சுகந்தி தன்னுடைய நண்பரான செல்வாவிடம், மீனாட்சி மட்டும் கையில் ஆகியோரது புகைப்படங்களை அனுப்பி வைத்து விலைமாதர்களாக சித்தரிக்கும் படி கூறியுள்ளார். இருவரும் விலைமாதர்களாக டிக்டாக்கில் சித்தரிக்கப்பட்டனர்.

இது இருவரது குடும்பத்திலும் புயலை உருவாக்கியுள்ளது. கயலை குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். தற்போது அவர் காப்பகத்தில் தனியாக வாடி கொண்டிருக்கிறார். அதேபோன்று மீனாட்சியும் மதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கயல் தேனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இருவரது புகாரையும் பெற்றுக்கொண்ட காவல்துறையினர் சுகந்தியையும், செல்வாவையும் கைது செய்தனர். போலீசிடம் பிடிபடாமல் இருப்பதற்காக இருவரும் முன்ஜாமீன் பெற்றனர். இன்னும் ஒரு வருடத்திற்கு வாட்ஸ்அப், ஃபேஸ்புக், டிக் டாக் முதலிய சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவு செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவமானது ஒத்தக்கடையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோன்று, செவிலியர் கல்லூரியில் படித்து வந்த மாணவியை பூபதி என்ற இளைஞர் டிக் டாக்கில் தவறாக சித்தரித்த குற்றத்திற்காக ஒத்தக்கடை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவங்களால் இன்று ஒத்தக்கடை காவல் நிலையம் பெரும் பரபரப்பானது.