அதிவேகத்தில் வந்த ரயில்! கவனிக்காமல் தண்டவாளத்தை நெருங்கிய பைக்! நொடியில் அரங்கேறிய பயங்கரம்! ஆனால்..?

ரயில் மீது இரு சக்கர வாகனம் மோதியும் நபர் ஒருவர் உயிர் பிழைத்திருக்கும் சம்பவமானது சீனா நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.


சீனா நாட்டில் டங்கடு என்று இடம் அமைந்துள்ளது. வெள்ளிக்கிழமை அன்று காலையில் சுமார் 7:30 மணியளவில் எண்.டி.எஸ் என்ற சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது. இதனை கவனிக்காத நபர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்து கொண்டிருந்தார். வந்த பின்னர் ரயிலின் முன் சக்கரத்தில் இருசக்கர வாகனம் மாட்டிக்கொண்டது.

உடனடியாக அவருடைய இருசக்கர வாகனம் தூக்கி வீசப்பட்டது. உடனடியாக ரயில்வே துறை அதிகாரிகள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். படுகாயம் அடைந்த அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆனால் அவருடைய உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லையென்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

எந்தவிதத்திலும் கவனிக்காமல் வாகனத்தை ஓட்டியதால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படலாம் என்று உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன. இந்த சம்பவம் சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.