கீழே விழுந்த தாய்-மகள் மீது ஏறி இறங்கிய லாரி! பலர் முன்னிலையில் அரங்கேறிய பகீர் சம்பவம்! குமாரபாளையம் பரிதாபம்!

இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே தாயும்,மகளும் உயிரிழந்தது நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம் என்னும் இடம் அமைந்துள்ளது. இதற்கு அருகேயுள்ள வட்டமலை என்னும் பகுதியை பூர்வீகமாக கொண்டவர் சித்ரா. இவர் தற்போது ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானியில் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். 

இன்று தன்னுடைய மகளை வீட்டருகே உள்ள தனியார் பள்ளியில் கொண்டு விடுவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது சேலத்திலிருந்து எதிரே அதிவேகத்தில்  வந்துகொண்டிருந்த லாரியின் மீது அவர் மோதியுள்ளார்.

இதனால் சித்ராவும், அவருடைய மகளும் கீழே விழுந்தனர். லாரியின் சக்கரங்கள் அவர்கள் மீது ஏறி சென்றதால் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார் காவல்துறையினர் இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உடற்கூறு ஆய்வு செய்த மருத்துவர்கள் பிணங்களை பிணவறையில் வைப்பதற்கு காவல்துறையினரிடம் இருந்து ஆணை வரவில்லை என்று கூறியுள்ளனர். இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு நிலவியது.

வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், தலைமறைவாகியுள்ள லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர். இந்த சம்பவமானது நாமக்கல் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.