தாறுமாறாக பைக்கில் வேகம்! அடித்து தூக்கிய லாரி! 2 பேர் ஸ்பாட் அவுட்! செஞ்சி பரிதாபம்!

லாரி மற்றும் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் சம்பவ இடத்திலேயே 2 பேர் பலியான சம்பவமானது விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் அகரம் எனும் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் யுவராஜ், ஏழுமலை,ஜனா ஆகியோர் வசித்து வந்தனர்.  விழுப்புரம் மாவட்டத்திற்கு அருகே செஞ்சி அமைந்துள்ளது. இதற்கு அருகேயுள்ள மேல்பாப்பம்பட்டியில் 3 பேரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது எதிரே வந்து கொண்டிருந்த லாரி மீது மோதியுள்ளனர். சம்பவ இடத்திலேயே யுவராஜ் மற்றும் ஏழுமலை உயிரிழந்துவிட்டனர். ஜனா படுகாயம் அடைந்தார். 

சம்பவமறிந்த காவல்துறையினர்  விரைந்து வந்து இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த ஜனாவை பொது மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த சம்பவமானது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.