பாம்புகளை போல் 2 வாரங்களுக்கு ஒரு முறை தோல் உரியும் சிறுவன்! காண்போரை அதிர வைக்கும் நிகழ்வு! பேரதிர்ச்சி காரணம்!

லண்டன்: சரும வறட்சியால், அடிக்கடி தோல் உதிரும் விநோத நோயால் பிரிட்டன் சிறுவன் பாதிக்கப்பட்டுள்ளான்.


டெர்பி பகுதியை சேர்ந்தவர் மைக்கேல் டெர்பி. 2 வயது சிறுவனான மைக்கேல் டெர்பி, பார்ப்பதற்கு ஒரு விளையாட்டு பொம்மை போலவே காட்சியளிப்பான். ஆம், அவனுக்கு Harlequin Icthyosis (HI) எனும் விநோதமான பாதிப்பு, பிறந்தது முதலே உள்ளது. இதனால், சருமத்தில் ஈரப்பதம் குறைந்து, வறட்சி ஏற்படும் பட்சத்தில், எந்நேரமும் தோல் விரிசல் அடைந்து, அப்படியே களிமண் போல உதிர தொடங்கும்.

கட்டி கட்டியாக தோல் உதிர்ந்துவிட்டால், உடல் முழுக்க தோல் இல்லாமல் விகாரமாக காட்சியளிக்கும். இதில் இருந்த பாதுகாக்க ஒரே வழி, சிறுவனை தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும். அதாவது, உடலின் ஈரப்பதம் குறையாமல் பாதுகாக்க வேண்டும்.  

  இப்படி செய்ய தவறினால், நாளாக, நாளாக சிறுவனின் உயிருக்கே ஆபத்தான கதையாக மாறிவிடும். சிறுவன் மைக்கேல் பிறந்தபோதே, இந்த பாதிப்பு இருந்தது. அத்துடன் மேலும் சில உடல் உபாதைகளும் இருந்தன. அவற்றில் இருந்து அவன் உயிர் பிழைக்க மாட்டான் என மருத்துவர்கள் கூறிய நிலையில், சிறுவன் உடல்நலம் பெற்றுள்ளான்.

இருந்தாலும், தோல் பிரச்னை இன்னும் சரியாகவில்லை. அடிக்கடி தோல் உதிர்ந்து விழுவதால், தலை, முகம் என அனைத்தும் பார்ப்பதற்கு கடைகளில் விற்கப்படும் பொம்மை போல உள்ளது.