4 ஆண்டு ஆசை ஆசையாக வளர்ப்பு! அரசு அதிகாரிகள் செய்த மோசமான செயல்! கதறி அழுத சிறுமி! நெகிழ வைத்த சம்பவம்!

ஆசை ஆசையாக வளர்த்த 2 மரங்கள் வெட்டப்பட்டதால் சிறுமியொருவர் அழுது கொண்டிருக்கும் வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


மணிப்பூர் மாநிலத்தில் கக்சிங் மாவட்டம் அமைந்துள்ளது. இப்பகுதிக்கு உட்பட்ட ஹியாங்லாம் மக்கா லேக்காய் என்னுமிடம் அமைந்துள்ளது. இப்பகுதியில் 9 வயது மதிக்கத்தக்க சிறுமியான வாலென்டினா எலங்க்பாம் வசித்து வருகிறார். தனது வீட்டினருகில் 4 ஆண்டுகளுக்கு முன்னர் சிறுமி  குல்மோகர் மரங்களை வளர்க்க ஆசைப்பட்டார். அதற்கேற்றவாறே 2 மரங்களை நட்டுள்ளார்.

தற்போது இவர் 5-ஆம் வகுப்பு படித்து வருகிறார். 4 மாதங்களுக்கு முன்னர் மணிப்பூர் அரசானது ஏரிக்கரை பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மரங்களை வெட்டுவதற்கு உத்தரவிட்டது. அப்போது சிறுமி ஆசை ஆசையாக வளர்த்த 2 மரங்களும் வெட்டப்பட்டன.

இதனால் சிறுமி மிகவும் வருத்தப்பட்டார். வருத்தப்பட்டு அவர் அழுதது சமூக வலைத்தளங்களில் வீடியோவாக பரவி வந்தது. இந்த வீடியோவை மணிப்பூர் மாநில முதலமைச்சரான பிரன் சிங் மற்றும் வனத் துறை அமைச்சரான ஷியாம் குமார் சிங் கண்டுள்ளனர். 

பின்னர் மரங்கள் மீது குழந்தைக்கு உள்ள பற்றை வளர்ப்பதற்கும் ஞாயிற்றுக்கிழமையன்று 20 மரக்கன்றுகளை நட்டுள்ளனர். இவ்வளவு சிறிய வயதில் இயற்கை மீது பற்றுக்கொண்டுள்ள சிறுமியை அப்பகுதி எம்.எல்.ஏ பரிசு வழங்கி கவுரவித்துள்ளனர். இந்த வீடியோ எனது சமூக வலைதளங்களில் அனைவரையும் இயற்கை மீது பற்றுக்கொள்ளுமாறு செய்துள்ளது.