கத்தி முனையில் இரண்டு திருநங்கைகளை கதற கதற கற்பழித்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
கத்திமுனையில் 2 திருநங்கைகள் கதற கதற கற்பழிப்பு! நடிகர் உள்ளிட்ட 3 பேர் வெறிச்செயல்!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் மணிப்பூரைச் சேர்ந்த திருநங்கைகள் இரண்டு பேர் பணியாற்றி வருகின்றனர். koramangala அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவரும் இவர்கள் இருவரும் கடந்த சனிக்கிழமை இரவு ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்துள்ளனர். இந்த நிலையில் காலிங் பெல் அடிக்கவே உணவு வினியோகம் செய்யும் நபர் தான் வந்துள்ளார் என்று கருதி கதவைத் திறந்து உள்ளனர். ஆனால் வெளியே கத்தியுடன் 3 பேர் நின்று கொண்டிருக்க திருநங்கைகள் இரண்டு பேரும் மிரண்டு போயினர்.
கத்தியை காட்டி மிரட்டி அவர்களை வீட்டிற்குள் அழைத்துச் சென்ற மூன்று பேரும் சுமார் 2 மணி நேரம் கதற கதற கற்பழித்தனர். தங்கள் ஆசையை திருநங்கைகள் இருவரிடமும் தீர்த்துக் கொண்ட பிறகு வெளியே யாரிடமாவது கூறினால் கொலை செய்ய வேண்டிவரும் என்று கூறிவிட்டு அவர்கள் சென்றுவிட்டனர். தாங்கள் திருநங்கை என்பதால் காவல் நிலையம் சென்றால் தங்களுக்கு தான் பிரச்சினை என்று கருதி இருவரும் அமைதியாக இருந்துள்ளனர்.
ஆனால் இதனை அறிந்த திருநங்கைகள் இருவரின் சக தோழிகள் மற்றும் தோழர்கள் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று புகார் அளிக்க வைத்துள்ளனர். விரைந்து சென்ற போலீசார் குடியிருப்பில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து திருநங்கைகளை பலாத்காரம் செய்த 3 பேரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மூன்று பேரில் ஒருவன் சினிமா துணை நடிகன் என்றும் மற்றொருவன் சமையல்காரன் என்றும் இன்னொருவன் கார் ஓட்டுனர் என்றும் தெரியவந்துள்ளது.