இரவு நேரத்தில் வீட்டிலிருந்து வெளியே 2 சகோதரிகள் காணாமல் போன சம்பவமானது இமாச்சல பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒருவருக்கு வயது 17..! ஒருவருக்கு வயது 15! இரவு வரை வீடு திரும்பவே இல்லை..! 2 சகோதரிகளுக்கு நடந்தது என்ன? அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

இமாச்சலப்பிரதேசத்தில் டிம்பர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் யாமினி என்ற 17 வயது இளம்பெண்ணும், அவருடைய சகோதரியான 15 வயது சன்வியும் வசித்து வருகின்றனர். 2 நாட்களுக்கு முன்னர் இவர்கள் ராஜ்கர் நகருக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
அன்று இரவு வரை இருவரும் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் பதற்றம் அடைந்துள்ளனர். பல்வேறு இடங்களில் தேடியும் அவர்கள் கிடைக்காத காரணத்தினால், அப்பகுதி காவல் நிலையத்தில் புகாரளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் கூறுகையில், "2 நாட்களுக்கு முன்னர் யாமினி மற்றும் சன்வி ஆகிய இருவரையும் காணவில்லை என்று அவர்களுடைய பெற்றோர் புகார் அளித்தனர். பின்னர் விசாரணை நடத்தியதில் இவர்களின் தந்தைக்கு ராஜ்கர் நகரில் ஒரு சொந்த வீடுள்ளது. ஆனால் இவர்கள் அந்த வீட்டிற்கு செல்லவில்லை.
நடு வழியில் எங்கோ மாயமாகியுள்ளனர். வழக்குப்பதிவு செய்து நாங்கள் அவர்களை தேடி வருகின்றோம். சமூக வலைத்தளங்களின் மூலமும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. யாருக்காவது தகவல்கள் தெரிந்தால் எங்களிடம் தகவல் தெரிவியுங்கள். அவர்களைக் கண்டு பிடிப்பதற்காக தனிப்படை ஒன்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது" என்று கூறியுள்ளனர்.
இந்த சம்பவமானது இமாச்சல் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.