அக்காள் - தங்கை பாலியல் பலாத்காரம் செய்து கொலை! 5 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கிய தந்தை - மகன்! பதற வைக்கும் சம்பவம்!

உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர்நகரில் டீன் ஏஜ் சகோதரிகள் இருவரை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற புகாரில் தந்தை மகனை ஹரியானா மாநிலப் போலீசார் கைது செய்துள்ளனர்.


கடந்த 2014-ஆம் ஆண்டு முசாஃபர் நகரில் டீன் ஏஜ் சகோதரிகள் இருவர் 12 பேரால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டனர். ஏறக்குறைய 12 பேர் மீது வழக்கு பதிவு செய்து சிலரை மட்டுமே கைது செய்த போலீசார் வேறு சிலரை பிடிக்க  முடியாததல் தலைமறைவுக் குற்றவாளிகளாக அறிவித்து தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். 

அந்த வகையில் தந்தையும் மகனுமான இனாம், இசார் ஆகியோரையும் போலீசார் தேடி வந்தனர். அவர்கள் குறித்து தகவல் அளிப்போருக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையும் அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் இருவரும் ஹரியானா மாநிலம் அம்பாலா நகரை அடுத்த ஒரு கிராமத்தில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் இருவரையும் கைது சிறையில் அசைத்தனர் .