2 ரூபாய்க்கு கிடைக்கப்போகும் கொரோனா மருந்து ? நல்ல காலம் பிறக்குமா?

ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் ஒரு மருந்துதான் கொரோனா வைரஸ்களை அழிப்பதில் சிறப்பாக இருக்கிறது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆம், டெக்ஸாமெத்தாசோன் என்ற மருந்துதான் இப்போது பிரிட்டன் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


ஸ்டீராய்ட் மருந்தான டெக்ஸாமெத்தாசோனை வென்டிலேட்டரில் உள்ள நோயாளிகளுக்குக் கொடுத்தால், மூன்றில் ஒரு பங்கு மரணங்களைக் குறைக்க முடியும் என்று தெரிவிக்கிறார்கள். பிரிட்டனில் கொரோனா வைரஸ் தொற்று தொடங்கிய காலத்தில் இருந்தே இந்த மருந்தைப் பயன்படுத்தியிருந்தால் 5 ஆயிரம் உயிர்களைப் பாதுகாத்திருக்க முடியும் என்கிறது இந்த ஆய்வுக் குழு.

இந்த மருந்து சந்தையில் எளிதாக கிடைக்கக்கூடிய மலிவான மருந்து என்பது குறிப்பிடத்த்தக்கது. ஆம், 10 மாத்திரை 2 ரூபாய்தான். பொதுவாக இது மூட்டுவலிக்கும் ஆஸ்துமாவுக்கும் மருந்தாக கொடுக்கப்பட்டு வருகிறது. மனித உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடும்போது, இந்த மருந்து கொடுக்கப்பட்டால் நல்ல முறையில் பயன் அளிக்கிறது என்று சொல்லப்படுகிறது.

இதுவரை எத்தனையோ மருந்துகள் இப்படித்தான் சொல்லப்பட்டன. அப்படியே இதுவும் போய்விடாமல், உண்மையிலே பலன் அளித்தால் நல்லதுதான்.