இதுக்காகவா சண்டை போடுவீங்க..? சின்னப்பிள்ளைங்க மாதிரி சண்டை போட்ட போலீஸ்காரர்கள்! வைரல் வீடியோ

காரில் முன் சீட்டில் உட்காருவதற்காக பொறுப்பின்றி 2 காவலர்கள் சண்டை போட்டுக்கொண்ட வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


உத்தரபிரதேச மாநிலத்தில் பிதூர் என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு ராஜேஷ் சிங் மற்றும் சுனில் குமார் என்ற 2 காவல்துறை அதிகாரிகளும் வாழ்ந்து வருகின்றனர். 

வழக்கம்போல அம்மாவட்டத்தின் தங்களுக்குரிய பகுதிகளில் காரில் சென்று ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது திடீரென்று சாலையின் ஓரத்தில் காரை நிறுத்தி இருவரும் சண்டை போட்டுக்கொள்ள தொடங்கினர்.

இதனைக்கண்ட சக காவல்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஒரு வழியாக அவர்கள் இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர். இந்த சண்டையை பிரபல செய்தி நிறுவனமானது படம்பிடித்தது.

சண்டைக்கான காரணத்தை கேட்டறிந்த போது, காரின் முன் சீட்டில் யார் உட்கார்ந்து கொள்வது என்பதற்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிப்போய் இருவரும் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் பொறுப்பின்றி சண்டைப்போட்டு கொண்ட 2 காவல்துறை அதிகாரிகளையும், மாநகர காவல்துறை ஆணையர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இந்த வீடியோவானது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.