கவுன்சிலர் முருகனும் யாசகனும் பெட்ரோல் ஊத்தி கொளுத்திட்டானுங்க! என் அப்பன எங்க? நம் ஈரக்குழையை அறுத்த ஜெயஸ்ரீயின் மரண ஓலம்! அங்கு நடந்தது என்ன?

விழுப்புரம் மாவட்டத்தில் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட பெண் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அளித்த வாக்குமூலம் காண்போர் நெஞ்சை கலங்க வைத்துள்ளது.


விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூருக்கு அருகே உள்ள சிறுமதுரை காலனியை சேர்ந்தவர் ஜெயபால். இவர் வீட்டிலேயே சிறிய பெட்டி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மனைவி ராஜி. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் பெயர் ஜெயஸ்ரீ. 15 வயதாகும் இவர் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இந்த தம்பதியினர் நேற்று வெளியே சென்று விட்ட காரணத்தினால் ஜெயஸ்ரீ மட்டும் வீட்டில் தனியாக இருந்திருக்கிறார்.

இந்நிலையில் காலை 11 மணி அளவில் வீட்டில் இருந்து புகை வருவதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அலறி அடித்து ஜெயபாலன் வீட்டை வந்து பார்த்துள்ளனர். அங்கே ஜெயஸ்ரீ உடம்பெல்லாம் தீக்காயங்களால் வெந்து கொண்டிருந்தார். உடம்பெல்லாம் தீப்பற்றி எரிந்ததால் வலியில் துடிதுடித்தார். இதை பார்த்து அதிர்ச்சிக்குள்ளான அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஆம்புலன்ஸை வரவைத்து அருகிலுள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு தீக்காயங்களுடன் ஜெயஸ்ரீயை அழைத்து சென்றனர்.

அப்போது ஜெயஸ்ரீக்கு 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட தீக்காயங்கள் உடம்பில் ஏற்பட்டுவிட்டது. தகவல் அறிந்த விழுப்புரம் மாவட்டம் எஸ்பி மற்றும் அதிகாரிகள் மருத்துவமனைக்கு விரைந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த ஜெயஸ்ரீயிடம் நேரிலேயே விசாரணை நடத்தினர். அவர் அளித்த வாக்குமூலத்தில் அந்த கவுன்சிலர் முருகனும் யாசகனும் என்மேல் பெட்ரோல் ஊற்றி கொளுத்தி விட்டார்கள். என் அப்பன் எங்கே என்று கதறி அழுதார். ஜெயஸ்ரீயின் இந்த வாக்கு மூலம் வீடியோவாகவும் எடுக்கப்பட்டது. முகம் எல்லாம் வெந்து போன நிலையில் கண்களை கூட திறக்க முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு அவர் வாக்குமூலம் கொடுத்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருவதால் இதை கண்ட மக்கள் அதிர்ந்து போயுள்ளார்கள்.

இந்த சம்பவம் முன்விரோதம் காரணமாக நடந்திருக்கலாம் என்றும் முருகனும் , யாசகனும் ஜெயபாலன் வீட்டிற்குள் நுழைந்து ஜெயஸ்ரீயின் கை ,கால்களை கட்டி போட்டு வாயில் துணியை வைத்து அடைத்து இரண்டு பேரும் சேர்ந்து அடித்து துன்புறுத்தி உள்ளனர். பின்னர் அங்கிருந்த பெட்ரோலை எடுத்து ஜெயஸ்ரீ மீது ஊற்றி தீ வைத்துவிட்டு வீட்டையும் வெளிப்புறமாக பூட்டி விட்டு சென்று விட்டார்கள் என கூறப்படுகிறது. ஜெயஸ்ரீ அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் முருகனையும், யாசகனையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.