திடீரென வழி மறித்த 2 இளைஞர்கள்! பெண் அதிகாரியை கட்டிப் பிடித்து முத்தம்! புதுச்சேரி பரபரப்பு!

சாலையோரத்தில் நடமாடி சென்ற வடமாநில பெண்னை 2 இளைஞர்கள் முத்தமிட்ட சம்பவமானது புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


புதுச்சேரியில் திருபுவனை எனுமிடம் அமைந்துள்ளது. இங்குள்ள தனியார் தொழிற்சாலையில் மும்பையை சேர்ந்த 23 வயது இளம்பெண் மேலாளராக பணியாற்றி வருகிறார். அங்குள்ள ரெயின்போ நகர் என்னுமிடத்தில் வசித்து வருகிறார்.

நேற்று இவர் அப்பகுதியின் பிரதான சாலையில் நடந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியில் மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்து கொண்டிருந்தனர். 

அவர்கள் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே இறங்கி அந்த பெண்ணுடன் அத்துமீறல்களில் ஈடுபட்டனர். மேலும் ஒரு இளைஞன் அந்தப் பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார். இதனால் பதறிப்போன அந்த இளம்பெண் கூச்சலிட தொடங்கியுள்ளார். 

உனடியாக அந்த இளம்பெண்ணை 2 பேரும் அடித்து கீழே தள்ளினர். பின்னர் அந்த 2 பேரும் பெண்ணை மானபங்கபடுத்தினர். பொதுமக்கள் அங்கு விரைந்து வருவதற்கு முன்பாக இருவரும் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றுவிட்டனர். 

பின்னர் அந்த இளம்பெண் பெரியகடை காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள நிறைய வீடுகள் மற்றும் கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றை கண்காணித்த பிறகு குற்றவாளிகளை கண்டு பிடிக்கலாம் என்று காவல்துறையினர் முடிவெடுத்துள்ளனர்.

இந்த சம்பவமானது புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.