திணற திணற குடி! மட்டையாகும் அளவுக்கு போதை! 2 நண்பர்களுக்கு பப்பில் ஏற்பட்ட கொடூரம்!

பெங்களூருவில் ஒரு பப்பின் 2-வது மாடியில் இருந்து விழுந்த இருவர் மரணம் அடைந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


உயிரிழந்த இருவரும் பவன் மற்றும் வேதா என தெரியவந்துள்ளது. இருவரும் 30 வயதுகளில் உள்ளவர். பவன் பிரபல செய்தித் தாள் நிறுவனத்திலும் வேதா ஒரு ஐ.டி. நிறுவனத்திலும் வேலை செய்கின்றனர்.

பெங்களூருவில் உள்ள சர்ச் தெருவில் உள்ள ஒரு கட்டிடத்தின் 3-வது மாடியில் பப் ஒன்றுக்குச் சென்ற இருவரும், அங்கு தங்களது கேளிக்கைகளை முடித்துக்கொண்டு இறங்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் இரண்டாவது மாடியில் மூடாமல் இருந்த ஒரு இடைவெளி வழியாக இருவரும் தவரி விழுந்ததாகக் கூறப்படுகிறது. 

வேதா சம்பவ இடத்திலேயே உயிரிழத நிலையில், பவன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பெங்களூருவின் புதிய காவல் ஆணையராக பொறுப்பேற்றுள்ள அலோக் குமார் ரோந்து  வந்துகொண்டிருந்த போது இருவரும் தவறி  விழுந்ததாகக் கூறப்படுகிறது. 

பப் மற்றும் கட்டிட உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இருவரின் உடற்கூறு பரிசோதனை அறிக்கைகளும் கிடைத்தால்தான் அவர்கள் மது அருந்தியிருந்தனரா எனத் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.