கள்ளக்காதலை ஏற்க மறுத்த பெண்! மனித வெடிகுண்டாக மாறி வெடித்துச் சிதறிய விபரீத நபர்!

தனது கள்ளக் காதலை ஏற்க மறுத்த பக்கத்துவீட்டு பெண்ணை மனித வெடிகுண்டாக மாறி ஒருவர் கொலை செய்த சம்பவம் கேரளாவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கேரள மாநிலம் சுல்தான் பத்தேரி அருகே உள்ள நாய்க்கட்டி பகுதியில் வசித்து வந்தவர் பென்னி. இவரது பக்கத்து வீட்டில் அமினா என்ற பெண் தமது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். பக்கத்து வீட்டுக்காரர் என்பதால் பென்னி அடிக்கடி அமினா வீட்டிற்கு சென்று வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் பென்னி அவரது காதலை அமினாவிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஏற்கனவே திருமணம் ஆன அமினா அவரது காதலை ஏற்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பென்னி அமினாவை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அமினாவின் கணவர் நாசர் தொழுகைக்கு சென்றிருந்த நிலையில் அமினா மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த பென்னி அவரது வீட்டிற்குள் வெடிபொருட்களுடன் நுழைந்ததாக கூறப்படுகிறது.

பிறகு வீட்டினுள் சென்ற பென்னி அமினாவிடம் தன்னை காதலிக்குமாறு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். பேச்சுவார்த்தை பயனளிக்காத நிலையில் திடீரென தமது உடலில் கட்டிக்கொண்டு வந்த பன்றிகளை வேட்டையாட பயன்படும் வெடிப்பொருட்களை அமினா அருகில் சென்று வெடிக்க செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த கோர சம்பவத்தில் அமினாவும் பென்னியும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

அமினாவின் கணவர் நாசர் தொழுகைக்கு சென்றிருந்தார்.  அவரின் குழந்தை வெளியே விளையாடிக்கொண்டு இருந்ததாலும் இருவரும் உயிர் தப்பினர். வீட்டினுள் வெடி சத்தம் கேட்கவே பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்கள்.சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருவரது உடல்களையும் கைப்பற்றி அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு  அனுப்பிவைத்தனர்.

பின்னர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதையடுத்து பென்னியின் வீட்டில் சோதனை நடத்திய போலீசார் அவரது வீட்டிலிருந்து பல்வேறுவிதமான வெடிப்பொருட்களை கைப்பற்றினார்.