அடடா அல்வா துண்டு இடுப்பு..! சில்வர் பீச்சில் காக்கி யூனிபார்மில் பெண் போலீஸ்கள் போட்ட குத்தாட்டம்! வைரல் வீடியோ!

பிரபல கோலிவுட் சினிமா பாட்டு ஒன்றிற்கு கடலூரில் பணியாற்றி வரும் 2 பெண் காவல்துறை அதிகாரிகள் நடனமாடி இருப்பது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சமீப காலமாக டிக்டாக் செயலி சமூக வலைத்தளங்களை ஆட்டிப்படைத்து வருகிறது. சில வீடியோக்கள் ரசிக்கும்படி இருந்தாலும் சில கண்டனத்திற்கு  உள்ளாகியுள்ளது. இதே போன்று இன்று செயலியில் வெளியான வீடியோயொன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் கடற்கரையில் இரண்டு பெண் காவல்துறை அதிகாரிகள் "சலக்கு சலக்கு சரிகை சேலை சலக்கு; விலக்கு விலக்கு வெட்கம் வந்தா விலக்கு விலக்கு " என்ற பாட்டுக்கு நடனமாடிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. 

இருவரும் காவல் உடையில் நடனமாடியுள்ளனர். கடற்கரையில் இருப்பதால் ஷு அணியாமல் இருந்தனர். இந்த வீடியோவிற்கு இருவேறு விதமான கருத்துக்களை நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

ஒரு சாரார், விடுமுறை இல்லாமல் மிகுந்த மனஉளைச்சலுடனும், வேலை மிகுதியிலும் பணி யாற்றும் காவல்துறை அதிகாரிகள் தங்களை புத்துணர்ச்சியுடன் பாதுகாத்து கொள்வதற்கு இது போன்ற நடனங்களை புரிவது தவறில்லை என்று கூறியுள்ளனர்.

வேறு சிலர், காவல்துறை அதிகாரிகள் காவல் உடையிலிருக்கும் போது மிகுந்த கண்ணியத்துடன் செயல்பட வேண்டும். இதுபோன்ற அநாகரீக செயல்களில் ஈடுபடுவது காவல்துறைக்கு களங்கம் விளைவிப்பதற்கு சமமாகும் என்று கூறியுள்ளனர்.

அந்த அதிகாரிகள் பணியை முடித்துவிட்டு நடனமாடினார்கள் என்பது தெரியவில்லை. இந்த சம்பவமானது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.