கட்டழகில் கவிழ்ந்த நகைக்கடை உரிமையாளர்! சிசிடிவி கேமரா மூலம் சிக்கிய இளம் பெண்! என்ன செய்தார் தெரியுமா?

திருச்சி மாவட்டம் முசிறி அருகில் இரண்டு பெண்கள் இருவர் தனியாக சந்தேகத்திற்க்கு இணையாக நடப்பதை கவனித்த போலீசார் அவர்களை விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.


முசிறியில் காவல் துறை அருகில்  சந்தோஷ் குமார் பல ஆண்டுகளாக நகை கடை நடத்தி வருகிறார், சில தினக்களுக்கு முன்னதாக அந்த கடையில் நகை வாங்க சென்ற இரண்டு பெண்கள், பின்னர் கடைக்கு அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் சந்தேகபடும் படியாக நின்றுக் கொண்டிருப்பதை பார்த்த போலீசார் விசாரணை செய்ததில் அவர்கள் இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

பின்னர் தான், அவர்கள் இருவரும் ஜான்சி ராணி மற்றும் சாந்தி என தெரிய வந்தது மேலும் பெண் போலீசார் அவர்களை சோதித்த போது உடையில் 15 செட் வெள்ளி கொலுசுகள் மறைத்து வைக்கபட்டிருந்தது கண்டுபிடிக்கபட்டது. திடுக்கிட்ட போலீசார் , அருகில் இருந்த சந்தோஷிடம் நடந்த சம்பசத்தை கூறிய பின்னர் தான் திருட்டு நடந்ததை உணர்கிறார்

மேலும் கைடயின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது  கட்டழகு பெண் ஒருவர் பேச்சு கொடுக்க, அதில் மயங்கிய நகைக்கடை உரிமையாளர் மற்றொரு பெண் கொலுசுகளை திருடியதை கவனிக்கவில்லை. அவர், மேலும் திருடப்பட்ட பொருட்களின் மொத்த விலை சுமார் 50 ஆயிரம் ரூபாய் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது. கடைக்கு வாடிக்கையாளராக வந்த இளம் பெண் அழகாக இருந்ததால் கவனம் தடுமாறிய சந்தோஷ்க்கு தக்க பதிலடியாக அமைந்துள்ளது இந்த திருட்டு சம்பவம் .