யமஹா ஆர்15 பைக்! 150கிமீ வேகம்! குறுக்கே வந்த 2 பெண்கள்! பதற வைக்கும் சம்பவம்!

சென்னை: 150 கிமீ வேகத்தில் சீறிப் பாய்ந்த யமாஹா பைக்கில் இருந்து பெண்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.


இந்திய சாலைகளில் சிலவற்றில் மட்டுமே, 80 கிமீ மற்றும் 120 கிமீ வேகம் செல்ல முடியும். ஆனால், சாலை பாதுகாப்பில் வாகன ஓட்டிகள்தான் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

ஏனெனில் இந்திய சாலைகளில் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் எந்நேரத்தில் எங்கு வேண்டுமானாலும் நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இதனால்தான், சாலை விபத்துகள் அதிகளவில் நடைபெறுகின்றன.

இதன்படி, யூ டியூப் பக்கம் ஒன்றில் ஒரு வைரல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், யமாஹா ஆர்15 பைக்கில் ஒருவர் 150 கிமீ வேகத்தில் பயணிக்கிறார்.

ஆனால், எதிரே சாலையில் 2 பெண்கள் சாவகாசமாக சாலையை கடக்கின்றனர். பைக்கின் வேகம் பற்றி தெரியாமல் அவர்கள் மிகவும் அஜாக்கிரதையாக இருக்க, பைக் ஓட்டி வந்த நபர், அந்த பெண்களின் குறுக்கே அப்படியே பைக்கை செலுத்தி செல்கிறார். இதனால், மயிரிழையில் இந்த விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. 

பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் கவனமாக இருக்க வேண்டும் என்று இந்த வீடியோவை பார்க்கும் பலரும் வலியுறுத்தியுள்ளனர்.