மாணிக்க கல் எடுக்க தோண்டப்பட்ட குழி..! அந்தப்பக்கம் விளையாடச் சென்ற பச்சிளம் குழந்தைகள்! நொடியில் நிகழ்ந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

சின்னஞ்சிறு சிறுமிகள் அகழ்வாராய்ச்சிக்காக தோண்டப்பட்டிருந்த குழியில் விழுந்து உயிரிழந்த சம்பவமானது இலங்கையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இலங்கையில் எலஹெர பிரதேசம் அமைந்துள்ளது. இங்கு கைவிடப்பட்ட மாணிக்க கல் அகழ்வாராய்ச்சிக்காக குழிகள் தோண்டப்பட்டு இருந்தன. இந்தக் குழுவில் சரிவர பராமரிக்கப்படாமல் கடந்த சில வாரங்களாக அப்படியே கிடந்துள்ளன. அப்பகுதியை சேர்ந்த ஐந்து மற்றும் ஏழு வயது சிறுமிகள் தங்களின் வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்தனர்.

விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் நெடு நேரமாகியும் வீடு திரும்பாததால் வெளியே வந்து பெற்றோர் தேடிப்பார்த்தனர். அப்போது குழந்தைகள் காணப்படாததால் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சந்தேகமடைந்த பெற்றோர் அருகில் பராமரிக்கப்படாமல் இருந்த அகழ்வாராய்ச்சி குழிக்குள் எட்டிப் பார்த்தபோது குழந்தைகள் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தனர்.

உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் போராட்டத்திற்கு பிறகு குழந்தைகளை குழியிலிருந்து வெளியே எடுத்தனர். பின்னர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். 

ஆனால் குழந்தைகளை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தைகள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். தங்கள் கண்முன்னே வைக்கப்பட்டிருந்த குழந்தைகளின் சடலங்களை கண்ட பெற்றோர் கதறி அழுத சம்பவமானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. 

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த செய்தியானது இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.