கொடூரமாக தலையில் தாக்கப்பட்ட தலித் சிறுவன் - சிறுமி! துடிதுடித்து பலியான பரிதாபம்! கொலையாளியின் அதிர வைக்கும் வாக்குமூலம்!

மத்திய பிரதேசத்தில் பொதுவெளியில் மலம் கழித்தார்கள் என்ற குற்றத்திற்காக 2 சிறுவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


மத்திய பிரதேச மாநிலம் சிவபூரி மாவட்டத்தில் பாவ்கேடி கிராமம் உள்ளது. அங்குள்ள வெட்டவெளி பகுதியில் 12 வயதுடைய ஒரு சிறுவன் மற்றம் சிறுமி அதிகாலையில் மலம் கழிக்க சென்றுள்ளனர். 

அது ஹக்காம் சிங் யாதவ் என்பவர் வீடு அருகே உள்ள பகுதியாகும். இவர்கள் இருவரும் அங்க மலம் கழிக்க சென்றதை பார்த்து கோபம் அடைந்த வீட்டு உரிமையாளர் சிறுவர்களை தாக்கி உள்ளார். பின்னர் அவரது சகோதரரும் அந்த சிறுவர்களை தாக்கி உள்ளனர்.

சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த கிராம மக்கள் அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் மருத்துவர்கள் எவ்வளவு போராடியும் சிறுவர்களை காப்பாற்ற முடியவில்லை.

இதுகுறித்து வழக்குப்பதிந்த காவல்துறை ஹகாம் மற்றும் அவரது சகோதரர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். ஹகாம் மனநலம் பாதிக்கப்பட்டவர் போலீசார் தெரிவித்து உள்ளனர். கனவில் வந்த கடவுள் குழந்தைகளை கொல்ல உத்தரவு பிறப்பித்ததாக ஹகாம் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து இரங்கல் தெரிவித்த மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத், குற்றவாளிகள் மீது சட்டப்படி கடுமையான தண்டனை எடுக்க உத்தரவிட்டார். இந்த செயலுக்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நம்மூரில் 12 வயது சிறுவன், சிறுமி ஒன்றாக திறந்த வெளியில் மலம் கழிக்க செல்வதில்லை. அந்த ஊரில் எப்படியோ?