பெரிய பாறங்கல்லைத் தூக்கி அப்படியே கார் மீது போட்ட ஊர் மக்கள்..! அதிர வைக்கும் காரணம்! பவானி பரபரப்பு!

ஈரோடு மாவட்டத்தில் விபத்து ஏற்படுத்தி 2 பேர் படுகாயம் அடைய காரணமாக இருந்த வாகனம் மீது கற்களை வீசி பொதுமக்கள் கோவத்தை வெளிப்படுத்தினர்.


ஈரோடு மாவட்டம் பவானி அருகே நரிப்பள்ளம் பகுதியில் வாடகை கார் ஒன்று எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த ஆருன் மற்றும் முகமதுநவாஸ் பலத்த காயம் அடைந்தனர். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் இருவரும் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த உறவினர்களும் போலீசாரும் விபத்துக்கு காரணமான காரை முற்றுகையிட்டனர். பின்னர் கார் ஓட்டுநர் துரைராஜை பலமாக தாக்கியுள்ளனர். மேலும் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பெரிய கற்களை கொண்டு கார் கண்ணாடி மற்றும் கதவுகளை உடைத்து சேதப்படுத்தினர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் பொதுமக்களிடம் இருந்து கார் ஓட்டுநரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பொதுமக்களால் சேதம் அடைந்த காரை பறிமுதல் செய்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் செல்பவர்களும் முறையாக சாலை விதிகளை பின்பற்றாமல் சென்றுவிட்டு விபத்து நடந்தபின் கார் மீதும், குடிநீர் லாரி மீதும் பழிபோடுவது எந்த விதத்தில் நியாயம் என்கின்றனர் பாதிக்கப்படுபவர்கள்.