மாஞ்சோலை..! கெஸ்ட் ஹவுஸ்..! 2 ஆண் வனவர்களுடன் ஒன்றாக தங்கிய 3 பெண் ஊழியர்கள்..! நள்ளிரவில் அரங்கேறிய பகீர் சம்பவம்!

அனுமதியின்றி 2 வனவர்களுடன் பெண்கள் மேற்கு தொடர்ச்சி மலை குதிரைவெட்டியுலுள்ள கெஸ்ட் ஹவுஸ் ஒன்றில் தங்கியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேற்கு தொடர்ச்சி மலையில் குதிரைவெட்டி என்ற இடம் அமைந்துள்ளது. தமிழகத்தில் முதன் முறையாக 1988 ஆம் ஆண்டில் முண்டந்துறை பகுதியில் புலிகள் காப்பகம் அமைக்கப்பெற்றது. இந்த புலிகள் காப்பகத்திற்கு சுற்றுவட்டாரத்தில் மாஞ்சோலை, ஊத்து, குதிரைவெட்டி ஆகிய பகுதிகளில் தனியார் கெஸ்ட் ஹவுஸ் நடைபெற்று வருகிறது. இவை புலிகள் காப்பகத்திற்கு அமைந்திருப்பதால் முறையான அனுமதியின்றி யாராலும் வசிக்க இயலாது. குதிரைவெட்டி பகுதியில் இயங்கி வரும் கெஸ்ட் ஹவுஸ் பராமரிப்பு பணிகளை 2 வனவர்கள் மேற்பார்வையிட்டு வந்தனர்.

இந்த கெஸ்ட் ஹவுசை தற்போது இரவு நேரத்தில் தங்குவதற்கு எந்தவித அனுமதியும் அளிக்கப்படுவதில்லை. இந்நிலையில் மேற்பார்வையிட்டு வந்த வனவர்கள் தங்களுடன் பணிபுரியும் 3 பெண்களை கெஸ்ட் ஹவுஸ் அழைத்து சென்றுள்ளனர். அங்கு பணியாற்றிவந்த ஊழியர்களை மிரட்டி சாவியை பெற்றுகொண்டு இரவு நேரத்தைக் கழித்துள்ளனர்.

ஊழியர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவலை தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த அதிகாரிகள் உடனடியாக வனவர்களை கைது செய்தனர். மூன்று பெண்களுக்கும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவமானது அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.