அசுர வேகத்தில் பறந்த அரசு பஸ்..! குறுக்கே வந்த பைக்..! எதிரே இன்னொரு பஸ்! நொடியில் நேர்ந்த கோரம்!

2 அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழந்த சம்பவமானது மேட்டுப்பாளையத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோயம்புத்தூரில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி பேருந்து புறப்பட்டது. குட்டையூர் எனும் பகுதிக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராவிதமாக அவ்வழியே குறுக்கிட்ட இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதியுள்ளது. உடனடியாக பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வலதுபுறம் திரும்பியதில் மற்றொரு அரசு பேருந்தின் மீது வேகமாக மோதியுள்ளது.

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஆண்ட்ரூஸ் என்பவர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பேருந்தில் பயணித்த சிறுவர்கள் பெண்கள் உட்பட 30 பேர் படுகாயம் அடைந்தனர். 

சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர் படுகாயமடைந்த அவரை அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவமானது குட்டையூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.