சுர்ஜித் குடும்பத்தை துரத்தும் துர் மரணங்கள்! 4 மாதங்களுக்கு முன்னர் அவன் வீட்டில் ஏற்பட்ட பெரும் துயரம்!

சுர்ஜித்தின் வீட்டில் 4 மாதங்களுக்கு முன்னர் உயிரிழப்பு ஏற்பட்டது சம்பவமானது அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த 5 நாட்களாக தமிழகம் முழுவதும் பேசும் பொருளாக இருந்தது 2 வயது குழந்தை சுர்ஜித். அவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து சிக்கி கொண்ட சம்பவம் தமிழ்நாட்டு மக்களை உலுக்கியது. அரசாங்கம் எவ்வளவோ முயன்றும், 80 மணி நேர நீண்ட போராட்டத்திற்கு பிறகு சுர்ஜித் உடல் சிதைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டான்.

சுர்ஜித்தின் தந்தையின் பெயர் பிரிட்டோ ஆரோக்கியராஜ். இவருடைய பெரியப்பாவின் மகனின் பெயர் ஜான் பீட்டர். இவர் ஒரு ராணுவ அதிகாரியாவார். மே மாதத்தில் ராணுவத்திலிருந்து விடுமுறைக்காக நடுக்காட்டுப்பட்டிக்கு வந்துள்ளார். பிரிட்டோ ஆரோக்கியராஜ் என் வீட்டிற்கு அருகே வசித்து வந்துள்ளார்.

திடீரென்று ஒரு நாள் வீட்டில் இருந்த கோழி திருதிருவென வெளியே வந்து கிணற்றுக்குள் விழுந்தது. கிணற்றுக்குள் விழுந்த கோழியை காப்பாற்றுவதற்காக ஜான் பீட்டர் முயற்சி செய்தார். அதன்படி கயிறை கட்டி கிணற்றுக்குள் சென்று கோழியை மீட்டெடுத்து மேலே வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராவிதமாக கயிறு அறுந்து போனது. 

கயிறு அறுந்ததை தொடர்ந்து எழுந்த ஜான் பீட்டரின் தலையில் பலமாக அடிபட்டது. சம்பவயிடத்திலேயே அவர் உயிரிழந்தார். அதன் பின்னர் அந்த கிணற்றை மூடி விட்டனர். 

4 மாதங்கள் கழித்து சுர்ஜித்தின் குடும்பத்தில் மேலும் ஒரு இறப்பு கிணறு வாயிலாக நிகழ்ந்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.