பிறந்து 2 நாட்களே ஆன சிசுவின் சடலம்..! பாதியை நாய்கள் கடித்து தின்ற கொடூரம்! ஓசூர் பயங்கரம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பிறந்த 2 நாளே ஆன சிசுவின் சடலம் முட்புதரில் கண்டெடுக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. மேலும் குழந்தையின் சடலத்தை நாய்களும் கடித்து குதறியதால் அது ஆணா, பெண்ணா என்று கூட தெரியாத வேதனையான சம்பவம் நிகழ்ந்துள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த மத்தம் அக்ரஹாரம் பகுதியில் உள்ள முட்புதரில் சிசுவின் சடலம் கிடப்பதாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் சிசுவின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வு செய்வதற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே பிறந்து 2 நாளே ஆன சிசுவின் சடலத்தை நாய்களும் கடித்து குதறி இருப்பதால் துரதிர்ஷ்டவசமாக அது ஆணா, பெண்ணா என்றுகூட கண்டுபிடிக்கமுடியவில்லை. குழந்தை சாலையோரம் உள்ள முட்புதரில் வீசிவிட்டு சென்றது யார் என்று விசாரணை செய்கிறது போலீஸ். மேலும் உடற்கூறு ஆய்வுக்கு பின்னர் குழந்தையின் பாலினத்தை வைத்து காதல் விவகாரத்தில் உருவான குழந்தையை வீசிவிட்டு சென்றனரா?

அல்லது ஒருவேளை பெண் குழந்தையாக இருந்தால் மீண்டும் பெண் குழந்தை பிறந்ததற்காக வீசிவிட்டு சென்றனரா என்ற விவரங்கள் தெரியவரும். பெண் குழந்தைகள் பிடிக்கவில்லை என்றால் அரசிடம் ஒப்படைப்பதற்காகத்தான் அரசு பெண் குழந்தைகள் தொட்டில் திட்டத்தை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்தார்.

ஆனாலும் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் இன்னும் இதுபோன்று குழந்தைகளை ஈவு இரக்கமின்றி குப்பையிலும், சாக்கடையிலும், முட்புதரிலும் போட்டுவிட்டு செல்கின்றனர். ஆயிரம் கனவுகளுடன் உலகத்திற்கு வந்த அந்த குழந்தை தனக்கு என்ன பெயர் வைக்கப் போகிறார்களோ என்று எதிர்பார்த்து மகிழ்ச்சியுடன் காத்திருந்த நிலையில் கழுத்தை நெரித்து கொன்றுபோட்டுவிட்ட சென்ற தாயை நினைத்து தற்போது வேதனைப்படுகிறது. ஆன்மா வடிவில்….