எலி மருந்து கலந்த பிஸ்கட்! 3 குழந்தைகளை அடுத்தடுத்து பலி கொடுத்த கொடூர தாய்! நெஞ்சை உறைய வைக்கும் காரணம்!

குழந்தைகளுக்கு எலி மருந்து கலந்த பிஸ்கட்டை கொடுத்து கொலை செய்த தாய் 3 வருடங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டிருப்பது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மதுரை மாவட்டத்தில் மேலூர் என்னும் பகுதியுள்ளது. இதனருகே சருகுவளையப்பட்டி என்னுமிடம் அமைந்துள்ளது. இங்கு ராகவானந்தம் என்பவர் வசித்து வந்தார். இவர் வெளிநாட்டில் வேலை கிடைத்ததால் இடம்பெயர்ந்தார்.

இவருடைய மனைவியின் பெயர் ரஞ்சிதா. ரஞ்சிதாவின் வயது 27. இத்தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் இருந்தன. பார்கவி, யுவராஜன், கிரிபாலன் என்பவராவர். 2016-ஆம் ஆண்டில்  அக்டோபர் மாதம் 3-ஆம் தேதியன்று 3 குழந்தைகளும் எலி மருந்து கலந்த பிஸ்கட்டுகளை சாப்பிட்டுள்ளனர்.

இதில் யுவராஜன் மற்றும் பார்கவி இறந்துவிட்டனர். உயிருக்குப போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கிரிபாலன் உயிர் பிழைத்தான். குழந்தைகளுக்கு இறுதி சடங்கு செய்வதற்காக ராகவானந்தம் வெளிநாட்டிலிருந்து வீட்டிற்கு வந்தார்.

அப்போது கிரிபாலனிடம் கேட்டபோது, தன் தாயும் கல்யாண்குமார் என்பவரும் பிஸ்கட்டில் எலி மருந்தை கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தனர். கசப்பாக இருந்ததால் கீழே துப்பியதால் கிரி பாலன் உயிர் பிழைத்துக்கொண்டான்.

2016-ஆம் ஆண்டிலேயே ராகவானந்தம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்திருந்தார். 2017-ஆம் ஆண்டில் நீதிமன்றமானது சந்தேக வழக்கினை கொலை வழக்காக மாற்றி காவல்துறையினரை விசாரிக்க உத்தரவிட்டது. தலைமறைவாகியிருந்த ரஞ்சிதாவையும் கல்யாண்குமாரையும் காவல்துறையினர் தேடி கண்டுபிடித்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியதில், "ராகவானந்தம் வெளிநாட்டிற்கு சென்றவுடன், நாங்கள் இருவரும் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்தோம். குழந்தைகள் எங்களுடைய உறவிற்கு இடையூறாக இருந்ததால் அவர்களை கொன்றுவிட திட்டமிட்டோம். அதற்காக எலி மருந்து கலந்த பிஸ்கட்களை குழந்தைகளிடம் கொடுத்து சாப்பிட வைத்தோம்" என்று கூறியுள்ளனர். 

இந்த சம்பவமானது மேலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.