கரணம் தப்பினால் மரணம்! 160 அடி உயரத்தில் உயிரை பணயம் வைத்து உறங்கும் தொழிலாளர்கள்! திடுக் காரணம்!

160 அடி உயரத்தில், இரும்புக்கம்பியில் தொழிலாளர்கள் உறங்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.


சீனாவில், விண்ணை முட்டும் கட்டிடங்கள் நிறைய உள்ளன. குறிப்பாக, ஹூனான் மாகாணத்தில் உள்ள சென்ஸோவ் பகுதியில், ஒரு ராட்சத கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானப் பணிகளின்போது, தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்னைகளை தொகுத்து, சவுத் சீனா மார்னிங் போஸ்ட் என்ற ஊடகம்,  செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இடம்பெற்றுள்ள ஒரு புகைப்படம், தற்போது வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில், தொழிலாளர்கள் 2 பேர், இரும்புக்கம்பியில், தரையில் இருந்து 160 அடி உயரத்தில், இடுப்பு பெல்ட் அணிந்தபடி, உறங்குகின்றனர். இது பார்ப்பவர்களை அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது.

அவர்களில் ஒரு தொழிலாளி, இதுபற்றி சவுத் சீனா மார்னிங் போஸ்ட்டுக்கு அளித்த பேட்டியில், '' இப்படி உயரத்தில் வேலை செய்வது மிகக் கடினமான விசயம்தான். இவ்வளவு உயரம் ஏறிவருவது மிக பயமாக இருக்கும். காலையில் இப்படி மேலே ஏறி வந்தால், மதிய உணவின்போதுதான் கீழே இறங்குவோம்.

அதுவரை இயற்கை உபாதைகள் வந்தாலும், அடக்கியபடிதான் வேலை செய்ய வேண்டியுள்ளது. இறங்கி ஏறவே, ரொம்ப நேரம் பிடிக்கும் என்பதால், இப்படி நாங்கள் கட்டுப்பாட்டுடன் பணிபுரிய நேரிடுகிறது,'' எனக் குறிப்பிட்டுள்ளார்.