2 இளைஞர்களுடன் தனிமை! இரவு முழுவதும் போதை! பிறகு..? விலகியது பிங்கி மரண மர்மம்!

குளியலறையில் சடலமாக இருந்த பெண் கொலை செய்யப்பட்ட காரணங்கள் அனைவரையும் பதற வைத்துள்ளது.


பிங்கி என்பவர் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர். இவருடைய வயது 30. இவருக்கு சில ஆண்டுகள் முன்னர் திருமணம் நடைபெற்றது. ஆனால் சில மாதங்களிலேயே கருத்து வேறுபாட்டினால் தன் கணவனை பிரிந்தார். பின்னர் அதே மாநிலத்தை சேர்ந்த கிருஷ்ணா பகதூர் என்ற 26 வயது இளைஞனுடன் சென்னைக்கு வந்துள்ளார். சென்னையில் அண்ணா நகரில் ஒரு வீட்டில் இருவரும் ஒன்றாக வசித்து வந்தனர். ஆனால் திருமணம் செய்து கொள்ளவில்லை.

இந்நிலையில் நேற்று கிருஷ்ணா பகதூர் வேலைக்கு சென்று வீடு திரும்பியபோது, பிங்கி குளியலறையில் சடலமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றார். அப்பகுதி காவல்துறையினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இங்கே குளியல் அறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்திருக்கக் கூடும் என்று எண்ணினர்.

பின்னர் அந்த ஃபிளாட்டின் சிசிடிவி கேமரா பதிவுகளை கண்காணித்த போதும், பிங்கியின் செல்போனை ஆராய்ந்தபோதும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. வட நாட்டு இளைஞர்கள் போன்று தோற்றமளித்த இருவர் பிங்கியின் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். மேலும் பிங்கி தன்னுடைய செல்போனில் இருந்து விகாஷ் குமார் மற்றும் விகாஷ் ஷர்மா ஆகியோரை அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவர்களை டிராக் செய்து விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.

பணக்கார இளைஞர்களுக்கு உடலில் டாட்டூ குத்தும் பணியை பிங்கி செய்து வந்தார். மேலும் உயர் ரக புடவைகள் இருக்கும் வியாபாரத்திலும் பிங்கி ஈடுபட்டார். உடலில் டாட்டூ குத்திக்க வருபவர்களுடன் பிங்கி மது அருந்துவது வழக்கம். 

அதுபோன்று நேற்று விகாஷ் குமார் மற்றும் விகாஷ் ஷர்மா ஆகியோருடன் பிங்கி மது அருந்தியுள்ளார். பின்னர் அவர்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார். அதற்கு அவர்கள் பணம் கொடுத்துள்ளனர். மீண்டும் பிங்கியை அழைத்தனர். அவர்களிடம் போதிய பணமில்லாத  காரணத்தால் பிங்கி மறுத்துவிட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் பின் கையை கொடுமைப்படுத்தி உடலுறவு வைத்துக்கொள்ள முயன்றுள்ளனர். ஆனால் அப்போது பிங்கி கத்தியதால் அவரை தலையணையை வைத்து மூச்சடைக்க செய்து கொலை செய்து விட்டனர். பின்னர் சடலத்தை குளியல் அறை எடுத்து சென்று சுவற்றில் மோதி வழுக்கி விழுந்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயன்றுள்ளனர். 

இந்த சம்பவமானது அண்ணாநகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.