அதிவேகம்! நிதானமின்மை! நேருக்கு நேர் மோதிய 2 பைக்குகள்! நொடியில் பறிபோன உயிர்!

தேனி பெரியகுளம் அருகேயுள்ள எண்டப்புளி பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த நபர்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்து.


தேனி பெரியகுளம் அருகேயுள்ள எண்டப்புளி பகுதியில் அல்லிநகரத்தில் இருந்து திண்டுக்கல்லுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்ற சுரேஷ் என்பவரும் , திண்டுக்கல்லில் இருந்து இரு சக்கர வாகனத்தில் எதிரேவந்த நபரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் சம்பவ இடத்திலேயே சுரேஷ் என்பவர் உயிரிழந்தார்.

விபத்தில் காயமடைந்த மற்ற நபர்கள் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.