பஸ்ஸை அதிவேகத்தில் சைடு போட்ட டூ வீலர்..! எதிரே அசுர வேகத்தில் வந்த இன்னொரு டூ வீலர்! நேருக்கு நேர் மோதியதில் 4 பேரின் நிலை?

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவமானது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேன்கனிக்கோட்டை எனுமிடம் அமைந்துள்ளது. இப்பகுதிக்கு அருகே உள்ள தென்னங்கூர் எனுமிடத்தில் இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அவர்களுக்கு அருகே சென்ற அரசு பேருந்தை அவர்கள் முந்தி செல்ல முயன்றுள்ளனர். படுவேகத்தில் எதிரே என்ன வருகிறது என்பதை கூட கவனிக்காமல் முந்தினர்.

அப்போது எதிர்பாராவிதமாக எதிர்திசையில் இருந்து இருசக்கர வாகனம் விரைந்து வந்து கொண்டிருந்தது. 2 இருசக்கர வாகனங்களும் வேகத்தை கட்டுப்படுத்த இயலாமல் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.  மேலும் அவர் அந்தப்பக்கம் ஒதுங்குவார் என இவரும், இவர் வேறு பக்கம் ஒதுங்குவார் என அவரும் தப்பாக நினைத்துள்ளனர். இதனால் இந்த கோர விபத்து நேர்ந்துள்ளது.

2 இருசக்கர வாகனங்களிலும் மொத்தம் 4 பேர் சென்றுள்ளனர். இதில் தலைக்கவசம் அணியாமல் சென்ற பாஞ்சாலி என்னும் பகுதியை சேர்ந்த மோகன் என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்ற 3 பேருக்கும் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவமானது கிருஷ்ணகிரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.