நீண்ட அரசியல் குழப்பத்திற்கு பிறகு மகாராஷ்டிராவில் இன்று சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.
மகராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பம்! இரண்டு துணை முதல் அமைச்சர்களை நியமிக்க முடிவு! சிவசேனா அதிரடி திட்டம்!

காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து இரண்டு பேருக்கு துணை முதல் அமைச்சர்கள் பதவி கொடுக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் அஜித் பவாரின் ஆதரவுடன் முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். மேலும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார்.
இதனால் தேசியவாத காங்கிரஸ் காங்கிரஸ், சிவசேனா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரேவை ஒருமனதாக முதலமைச்சராக தேர்வு செய்தனர்.
இந்நிலையில் இன்று சிவசேனாவை சேர்ந்த உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். இவருடன் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரசை சேர்ந்த 2 பேர் துணை முதல்-அமைச்சராக பதவி ஏற்பார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.