சபரிமலைக்கு மாலை போட்டுவிட்டு அய்யப்ப பக்தர்கள் செய்த செயல்! வைரலாகும் விவகார வீடியோ!

ஐயப்ப பக்தர்கள் என்று கூறிக்கொண்டு 2 பேர் மது அருந்தும் வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


ஐயப்ப பக்தர்கள் குறித்த ஒரு வீடியோவானது சமூக வலைதளங்களில் நேற்று முதல் வைரலாகி வருகிறது. அதாவது ஐயப்ப பக்தர் போன்று காட்சியளித்த 2 பேர் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். இதனை வீடியோவாக எடுத்த வேறொருவர் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நெட்டிசன்கள் பலரும் இருவரது செயல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் புனிதமான ஐயப்ப பக்தர்கள் போன்ற வேடமணிந்து இதுபோன்ற தரக்குறைவான செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் கூறியுள்ளனர். 

இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.